சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி-கடலையூர் சாலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சந்திரன் என்பவர் நடத்தி வரும் குளிர்பான கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சந்திரனை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 51 ஆயிரத்து 140 ரூபாய் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.