Categories
தேசிய செய்திகள்

“இந்த கட்சியினை புது உச்சத்திற்கு கொண்டு செல்வேன்”…. மல்லிகார்ஜூன கார்கே பேச்சு….!!!!

கூட்டுத் தலைமை மீது தனக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் எல்லா உறுப்பினர்களுடனும் இணைந்து பணிபுரிந்து காங்கிரஸ் கட்சியினை புது உச்சத்திற்கு கொண்டுசெல்வேன் என காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூனகார்கே கூறியுள்ளார்.

வட கிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியினரிடம் அவர் நேற்று உரையாற்றியபோது “உதய்பூர் பிரகடனத்தை அமல்படுத்துவதே என் முக்கியமான நோக்கம் ஆகும். பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல், பழங்குடி இனத்தவர் உள்ளிட்ட 50 வயதிற்கும் குறைவானவர்களை கட்சி பொறுப்புகளில் நியமித்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவேன்.

நான் ஆலோசனைகள் பெறுவது மற்றும் கூட்டுத் தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளேன். இதனிடையில் கட்சி உறுப்பினர்கள் என் பின்னால் வருவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை. அவர்கள் எனக்கு பக்க பலமாக என்னுடன் இணைந்து பயணிப்பதையே விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிந்து கட்சியின் அடிப்படை அமைப்பினை வலுப்படுத்துவோம்.

 

Categories

Tech |