Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்”…. நடிகர் சூர்யா டுவிட் பதிவு…. நெகிழ்ச்சி….!!!!

சூர்யா நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான படம்தான் “ஜெய்பீம்”. இந்த படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் இந்த படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து இருந்தார்.

சென்ற வருடம் நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று இருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் டக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்தது. எனினும் இப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது.

இந்த நிலையில் “ஜெய்பீம்” படம் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதை கொண்டாடும் வகையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அவற்றில் இயக்குனர் ஞானவேல் ஜெய்பீம் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதனைத்தொடர்ந்து சூர்யா தன் சமூகவலைதளப்பக்கத்தில், “ஜெய்பீம் திரைப்படம் ஓராண்டு நிறைவுசெய்வதை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

திரைக்கதை முதல் இயக்கம்வரை இந்த படம் வலுப்பெற்றுக் கொண்டே இருந்தது. இந்த அர்த்தம் உள்ள படத்தை கொடுத்த என் சகோதரர் ஞானவேல் மற்றும் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல் ஆகும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |