திண்டுக்கல் மாவட்டத்தில் பிலாத்து பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய தோட்டத்தில் ஏக்கர் கணக்கில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். பிறகு பயிர் நன்கு வளர்ந்த உடன் வடமதுரையில் இருக்கும் ஒரு உரக்கடையில் தனியார் நிறுவனத்தினுடைய கலைக்கொல்லி மருந்தை வாங்கி பயிர்களுக்கு அடித்துள்ளார். இந்த மருந்தை அடித்ததும் பயிர்கள் வளராமல் அப்படியே கருகிவிட்டது. ஆனால் வேறு களைக்கொல்லி மருந்தை வாங்கி அடித்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் ஐந்து அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றது.
இதே போல் அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளினுடைய பயிர்களும் இந்த களைக்கொல்லி மருந்தால் கருகிவிட்டது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் களை கொல்லி மருந்து நிறுவனத்திடமும் வேளாண்மை துறை அதிகாரிகளிடமும் மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகார் குறித்து அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கருகிப்போன பயிர்களுக்கு உடனடியாக அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பயிர்கள் கருகி போவதற்கு காரணமாக இருந்த களைக்கொல்லி மருந்தை நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.