கன்னியாகுமரி ரெயில்வே ஸ்டேஷன் அருகே கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த போது அவர்களில் முருகன் என்பவர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை எங்கோ பார்த்ததுபோல் உணர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அவர் கூறிய தகவலை வைத்து காணாமல்போன தனது உறவினர்தான் என்பதை முருகன் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார். முருகன் சொன்ன தகவல் படி அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் முத்து என்பதும், எம்பிஏ வரை படித்துள்ள அவர் சென்னையில் தங்கி ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்ததும் காதல் தோல்வியால் கடந்த 2018ம் ஆண்டு அவர் காணாமல் போனதும் அவரை பல இடங்களில் தேடிய நிலையில், தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.