கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோழிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் கிழக்கு மாநிலதிலுள்ள ரோஸ்டாக் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு H5N 8 வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பண்ணையில் உள்ள சுமார் 4500 கோழிகளை கொல்ல வேண்டியிருக்கும். மேலும் பல இடங்களில் இந்த கோழிப்பண்ணை இருப்பதால் மொத்தம் 70 ஆயிரம் கோழிகளை கொல்ல நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். கோழிகளுக்கு நோய் பரவலை எதிர்த்துப் போராடவும் மற்றும் நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் 7 ஆயிரம் கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த வாரம் தொடர்ச்சியாக கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரவி வருவதால் இந்த நோய் காட்டு பறவைகள் எதுவிடமிருந்தாவது பரவியிருக்குமா? என்று சந்தேகிக்கப்படுகிறது. ஜெர்மனியிலுள்ள மற்றுமொரு கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவை காய்ச்சல் காணப்பட்டதையடுத்து சுமார் 16,100 வான்கோழிகள் கொல்லப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.