பிரிட்டனில் பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் முக்கியமான காரணத்தை நிரூபிக்காவிடில் விமானத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நாளையிலிருந்து புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனில் இருந்து பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் தங்களுக்குரிய காரணத்தை முக்கியமானதாக நிரூபிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிரூபிக்கவில்லை எனில் அபராதமாக 200 டாலர்கள் செலுத்தவேண்டியிருக்கும் என்று பிரிட்டன் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் அரசாங்கத்தின் வலைதள பக்கத்தில் இருந்து மக்கள் மூன்று பக்க படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் பயணத்திற்கு முன்பாக கையொப்பமிட்டிருக்கவேண்டும். மேலும் மக்கள் பயணம் மேற்கொள்வதற்கான சரியான காரணத்தை தெரிவிக்கும் படிவத்தை நிரப்ப தவறினால் விமானத்திற்குள் அனுமதி கிடையாது, அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது பிரிட்டனில் பணி, கல்வி, மருத்துவம், தன்னார்வத்தொண்டு, இறுதி சடங்குகள் ஆகிய சில குறிப்பிட்ட நிகழ்வுகள் தவிர்த்து மற்ற எந்த காரணங்களுக்காகவும் பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களாகவே காவல்துறையினர் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் பரிசோதனை பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
எனவே இனி வரும் திங்கட்கிழமை இருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது. மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்ற தவறும் நபர்களுக்கு அதிகபட்ச அபராதமாக 6500 டாலர்கள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.