Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த காரணத்துக்காகத்தான் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தார்”…. ரகசியத்தை சொன்ன விஜய்யின் நெருங்கிய நண்பர்…!!!!!!

வாக்களிப்பதற்கு விஜய் சைக்கிளில் வந்தது குறித்து அவரின் நண்பர் சஞ்சீவ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் வரும் பொங்கலுக்கு இத்திரைப்படத்தை வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருக்கின்றது. இதை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

அண்மை காலமாகவே விஜய் எது செய்தாலும் அது சர்ச்சைக்குரியதாக இருந்தது. அந்த வகையில் சென்ற வருடம் சட்டமன்றத் தேர்தலுக்காக விஜய் வாக்களிப்பதற்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற சைக்கிளில் வந்திருந்தார். இது அப்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்நிலையில் இது குறித்து விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் காரணத்தை கூறியிருக்கின்றார்.

அவர் கூறியுள்ளதாவது விஜய் சைக்கிளில் வந்ததை பற்றிய செய்திகளை கேட்டு அவருக்கு போன் செய்தேன். அப்போது அவர், “வாக்களிக்கும் இடம் என் வீட்டின் அருகே தான் இருக்கின்றது. அதற்கு நான் காரை எடுத்துக் கொண்டு செல்வது சரியாக இருக்காது. அப்படி நான் காரை எடுத்துச் சென்றால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். இதனால் தான் நான் சைக்கிளில் சென்றேன் என கூறினார். இதுபற்றி சஞ்சீவ் பேசியது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |