விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-உடுமலை ரோடு வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டன்சத்திரம், மதுரை உள்பட பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாக்கினாம்பட்டியில் இருக்கும் பி.ஏ.பி அலுவலகம் அருகே கார் ஒன்று விபத்தில் சிக்கியது.
அந்த கார் இதுவரை அகற்றப்படாமல் சாலையோரத்தில் கிடப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அது குறுகிய சாலை என்பதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கார் மீது மோத வாய்ப்பு இருக்கிறது. எனவே விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.