Categories
தேசிய செய்திகள்

இந்த கார்டு நம்மிடம் இருந்தால்…. பெட்ரோல்-டீசல் போடும்போது…. கேஷ்பேக் சலுகை கிடைக்குமாம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களின் பெட்ரோல் டீசல் விலை சதம் அடித்து விட்டது. ஏற்கனவே கொரோனா நெருக்கடியான காலத்தில் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்ற நிலையில் பெட்ரோல் விலை உயர்வு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சூழலில் பெட்ரோல்- டீசல் எப்பொழுது விலை குறையும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

விலையை குறைக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.  இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து புதியகிரெடிட் கார்டு  திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில், இந்த கிரெடிட் கார்டு மூலமாக வாடிக்கையாளர்கள் குறைந்த விலைக்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். குறைந்த விலைக்கு பெட்ரோல் போடுவது என்பது கேஷ்பேக்  சலுகை ஆகும். இந்த கிரெடிட் கார்டை வைத்து முதலில் அசலுக்கு பெட்ரோல் போட வேண்டும். பின்னர் தான் கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல் இந்த கார்டு மூலமாக மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்தாலும் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இந்த கார்டை வைத்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல்- டீசல் போட்டால் மட்டுமே சலுகை கிடைக்கும். இந்த கார்டை நீங்கள் பெறுவதற்கு ஐசிஐசிஐ வங்கியின் இன்டர்நெட் பாங்கிங் அல்லது imopile ஆப் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் எரிபொருள், மின்சாரம், மொபைல் பில், ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றிற்கும் இந்த கார்டை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |