Categories
தேசிய செய்திகள்

இந்த கார்டு வச்சிருக்கீங்களா…? ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு சலுகை…!!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 2 லட்சம் வரை கடன் கிடைக்கும் காப்பீடு திட்டத்தை எப்படி பெறுவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இது ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களை காப்பீட்டு சலுகை வழங்குகிறது. அதாவது ஜன்தன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்து அதை பயன்படுத்தி வந்தால் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் விபத்து காப்பீடு வசதியை பெற முடியும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஜன்தன் திட்டத்தின் கீழ் இதுவரை கணக்கு தொடங்கியவர்களுக்கு, இனி கணக்கு தொடங்குபவர்கள் இந்த சேவையை அறிமுகம் செய்கிறது.

இந்த ரூபே கார்டை 90 நாட்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. இந்த வங்கியில் ஆதார் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ரூபே கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து வாங்கினால் 2 லட்சம் வரை காப்பீடு மற்றும் பல சலுகைகளை பெற முடியும். 2014ஆம் ஆண்டு ஜன தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இது விபத்து காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு மத்திய மாநில அரசுகளின் நிதி உதவிகளைப் பெறுவதற்காக இந்த கணக்கு தொடங்கப்பட்டது. இந்த கணக்கு மூலம் வங்கிகளில் 2 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.

Categories

Tech |