Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த காலத்திலும் இப்படியா!…. கூடுதல் வரதட்சனை கேட்டு மிரட்டிய மாப்பிள்ளை….. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 28 வயது ஐ.டி. பெண் ஊழியருக்கும் கோவை அருகில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான லோகேஷ்(28) என்பவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சென்னை ஆவடியில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அதனை தொடர்ந்து சென்னை சென்ற லோகேஷ் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி அங்கு வரும்படி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் அந்த ஓட்டலுக்கு சென்றபோது வரவேற்பறையில் உள்ள ஆவணத்தில் இரண்டு பேரும் கையெழுத்து போட்டு உள்ளனர்.

இதனை அவருக்கு தெரியாமல் லோகேஷ் புகைபடம் எடுத்துக் கொண்டார். சில நாட்கள் கழித்து லோகேஷின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டது. அவர் அந்த பெண்ணிடம் பேசவில்லை என்று தெரிகிறது. மேலும் அவர் அந்த பெண்ணிடம் நான் உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் மற்றும் 100 பவுன் நகை கூடுதலாக தரவேண்டும் இல்லையென்றால் நீ ஓட்டலுக்கு வந்தபோது எடுத்த புகைப்படத்தை உனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு லோகேஷின் தாயார் கோகிலாவாணியும் உடந்தையாக இருந்துள்ளார். இதை பற்றி அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் பேரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லோகேஷ் மற்றும் அவருடைய தாயார் கோகிலாவாணியின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |