அமெரிக்காவில் தன்னிடம் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்ணிற்கு தனது கடையை வெறும் ஒரு டாலருக்கு விற்ற ஓனரை பற்றி இதில் பார்ப்போம்.
இத்தாலி நாட்டை சேர்ந்த பியோ என்பவர் அமெரிக்காவின் கனெக்டிகட் என்ற பகுதியில் 56 ஆண்டுகளாக சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பல கடைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மெளரா என்ற இளம்பெண் இவரது கடையில் ஹேர்ஸ்டைலஸ் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் மிகவும் விசுவாசமானவர். பணியில் ஆர்வமுடன் நன்றாக வேலை செய்வார். பியாவுக்கு அவரை மிகவும் பிடிக்கும். இருவரும் நெருங்கி பழகி குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டனர். இந்நிலையில் மெளராக்கு தன் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்தது.
பியோவுகும் 79 வயது ஆனதால் அனைத்து கடைகளையும் பார்க்க முடியாமல் தவித்தார். இதனால் பியோ தனது பணியாளர் மெளராவுக்கு தனது கடையை விற்க முடிவு செய்தார். அதும் ஒரு டாலருக்கு விற்றார். தன்னிடம் விசுவாசமாக இருந்த தொழிலாளிக்கு உதவும் வகையில் இதை செய்துள்ளார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த மெளரா அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். அந்த இடம் பியோவின் சொந்த இடம் என்பதால் அவருக்கு மாதம் வாடகை மட்டும் வழங்க உள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தன்னிடம் விசுவாசமாக வேலை பார்த்த ஒருவருக்கு தன் கடையை ஒரு டாலருக்கு விற்ற முதலாளியை அதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.