மூதாட்டி ஒருவர் தனது 102-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் பகுதியில் ஆர்.அலமேலு அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள், மகன், பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோருடன் தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடனப்போட்டி, உறியடித்தல், கண்ணாமூச்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அலமேலு அம்மாளிடம் குடும்பத்தினர் அனைவரும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.