உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டார் எனக் கூறி இறப்பு சான்றிதழ் வழங்கி உடலையும் வீட்டுக்கு அடைத்து வைத்த கொடூரம் பீகாரில் நடைபெற்றது.
பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி 40 வயதுடைய கண்ணுகுமார் என்பவர் பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். திடீரென அவர் இறந்து விட்டார் என உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பெருந்தொற்றால் இறந்தால் அவரது உடல் நேரடியாக தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடைசியாக அவரின் முகத்தை பார்க்க அவரது கவச உடையை அகற்றிய போது அங்கு வேறு ஒருவரின் சடலம் இருந்தது.
உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பிறகு நடைபெற்ற விசாரணையில் கண்ணுக்குமார் உயிருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இதனால் அவரது உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஐ.எஸ் தாகூர் தெரிவித்துள்ளார். ஆனால் உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டார் எனக் கூறி வேறொரு சடலத்தை அனுப்பிய கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் மோசமான நிர்வாகத்தால் பீகாரில் மட்டுமே இதுபோன்ற ஆள்மாறாட்டம் எல்லாம் சகஜம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்