குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கும் வகையில் புதிய சிலிண்டரை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சிலிண்டர் விலையில் இருந்து ஏதாவது நிவாரணம் கிடைக்காதா? என பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றன. இந்நிலையில் கிட்டத்தட்ட 300 ரூபாய் குறைந்த விலையில் சிலிண்டர் வாங்குவதற்கு ஒரு சூப்பரான திட்டத்தை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு சாதாரண சிலிண்டரின் விலை 965 ரூபாய் ஆகும். எனினும் 634 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கான புதிய வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது காம்போஸிட் சிலிண்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிலிண்டர் 10 கிலோ எரிவாயு நிரப்பப்பட்டிருக்கும். சாதாரண சிலிண்டரை விட காம்போஸிட் சிலிண்டரின் எடை 50 சதவீதம் குறைவாக இருக்கும். இதை தூக்குவதும் எளிது. இதன் விலை 634 ரூபாய் மட்டுமே. இந்த சிலிண்டரில் இன்னொரு சவுகரியமும் உள்ளது. நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சிலிண்டரில் கேஸ் எவ்வளவு மீதி உள்ளது என்பதை பார்க்க முடியாது. ஆனால் இந்த சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்பதை பார்க்கலாம். எனவே எப்போது சிலிண்டர் தீரும் என்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் இந்த சிலிண்டர் வெடிக்காது. பாதுகாப்பிலும் சிறந்ததாக உள்ளது. எனவே சிலிண்டர் செலவுகளை குறைக்க காம்போஸிட் சிலிண்டரை மக்கள் பயன்படுத்தலாம்.