பிரிட்டனில் கைக்கடிகாரம் மூலமாக கொரோனா கண்டறியும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் Port down என்ற ஆய்வகம் ரகசியமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆய்வகம் தற்போது கொரோனா பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறியும் வகையில் கைக்கடிகாரம் ஒன்றை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் பேராசிரியரான Tim Atkins கூறுகையில், மனிதர்கள் தங்களின் உடல்களில் அணியக்கூடிய வகையில் உள்ள உபகரணங்களில் ஒன்றான கைகடிகாரம் மூலமாக கொரோனா வைரஸை கண்டறிய செய்யலாமா? என்ற முயற்சியை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
அதாவது ஒரு மனிதனின் இதயத்துடிப்பு, சீரான உடல் இயக்கம் மற்றும் ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தற்போது வரை இந்த ஆய்வின் முதல் கட்டம் தான் செயல்பாட்டில் இருக்கிறது. எனினும் அது வெற்றியடையும் பட்சத்தில், கொரோனாவிற்கான அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்படுவதற்கு முன்பே இந்த கைக்கடிகாரமானது அதனை கண்டறிந்து தெரிவித்து விடும் என்று கூறப்படுகிறது.