Categories
அரசியல்

இந்த கொடிய மிருகத்தினை வெல்ல முடியாது…. மத்திய அரசை சாடிய திருமுருகன் காந்தி…!!!

மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, இந்திய மக்களின் சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்காகவே அரசு நிறுவனங்களை நட்டத்தில் தள்ளுகிறார்கள்  என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, “பாஜக அரசானது ஏர் இந்தியா முதல் ரயில்வே துறை வரை இந்த வித்தையை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி இந்தியாவின் மக்கள் சொத்துகளை தனியாரிடம் ஒப்படைக்கவே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களிடையே மத வெறியைத் தூண்டிவிட்டு அவர்களை பிளவு படுத்தியுள்ள இந்தநிலையில்  தனியார் வசம் மக்கள் சொத்துக்கள் தனியாரிடம் செல்வதை எவரும் கேள்வி கேட்க இயலாது என்று இதனை செயலாற்றுகிறார்.

அதாவது மக்களின் வளங்களை அழிப்பது, உணவு தானிய சேமிப்பு, விநியோகக்கடை, மீன் வளம், காடு உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் தனியாரிடம்  ஒப்படைத்தல் மிரட்டப்படும் ஊடகம், நீதித்துறைகள், சிதைக்கப்படும் கல்வி-மருத்துவம்-இடஒதுக்கீடு மற்றும் இசுலாமியர்-பெண்கள்-தலித்துகள்-ஆதிவாசிகள் மீதான கொடூர கொலை தாக்குதல் என முழுஅளவில் மிருகநிலைக்கு நாட்டை மாற்றி இவை அனைத்தும் நாட்டை ஒரு மிருக நிலைக்கு தள்ளப்படும் செயலாகும். மேலும் ஆர்.எஸ்.எஸ் மதமாக பிளவுபட்டுள்ள ஊர் மக்களால் கொள்ளையை தடுக்க இயலவில்லை . கடந்த ஆட்சியின் நிலவரத்தை புரிந்து கொள்ளாமல் இந்த கொடிய மிருகத்தை வெல்ல இயலாது” என்று கூறியுள்ளார்

Categories

Tech |