Categories
உலக செய்திகள்

இந்த சட்டத்தை கடுமையாக்குங்க…. துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க…. அமெரிக்க அதிபரின் அதிரடி முடிவு….!!

கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டுமென ஜோ  பைடன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றது. கடந்த 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவன் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் என 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கைத்துப்பாக்கியை தடை செய்ய பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்ததுள்ளது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையிலிருந்து அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை குறித்து அவர் கூறியதாவது “இன்னும் எத்தனை படுகொலைகளை நாம் ஏற்கத் தயாராக இருக்கிறோம்?” அமெரிக்க மக்களை நாங்கள் மீண்டும் தோல்வியடையச் செய்ய முடியாது. பெரும்பான்மையான குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் கைதுப்பாக்கியான கடுமையான சட்டங்களை ஆதரிக்க  மறுத்துவிட்டது. இங்கு  தாக்குதல் ஆயுதங்களை வாங்கக்கூடிய வயது 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும். இது பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கொலைக் களங்களாக மாற்றியுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்த உதவும். இதனை அடுத்து கைத்துப்பாக்கி வாங்குபவர்களின் பின்புல சோதனைகளை வலுப்படுத்த வேண்டும். இதுபோன்ற அதிக திறன் கொண்ட தோட்டாக்களை தடை செய்ய வேண்டும்.

இந்த துப்பாக்கிகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதை கட்டாயமாக்குதல் மற்றும் துப்பாக்கி உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பில் செய்யப்படும் துப்பாக்கி குற்றங்களுக்கு பொறுப்பேற்க அனுமதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |