Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்த சட்டமன்ற தொகுதிகளில்… தேர்தலன்று பதிவானவை… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 69.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தேர்தல் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்தலில் 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகளும், சென்னை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 59.40 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 69.62 சதவீத வாக்குகள் தேர்தலன்று பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் பின்வருமாறு;-

நாகப்பட்டினம் – 71.99 சதவீதம்

வேதாரணியம் – 80.60 சதவீதம்

கீழ்வேளூர் – 80.10 சதவீதம்.

Categories

Tech |