ரஷ்யா-உக்ரைன் இடையிலான பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யா கருங்கடல் அருகே ஒரு லட்சம் படைவீரர்களை குவித்து உக்ரைனுக்கு போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் அமெரிக்கா ரஷ்யாவிடம் தனது படைவீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதனை ரஷ்யா ஏற்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து ரஷ்யாவின் நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புதல் ஒன்றை எழுத்து மூலமாக தெரிவித்துள்ளது. முன்னதாக உக்ரைனுக்கு சொந்தமான கிருமியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அப்போது இருந்தே இரு நாட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா நோட்டா நாடுகளில் பட்டியலில் உக்ரனை சேர்த்து விடக்கூடாது என்பது ரஷ்யாவின் முக்கிய நிபந்தனையாகும் . மேலும் நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைனை சேர்த்தால் நேட்டோ படைகள் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யாவிற்கு அருகில் நிறுத்தப்படலாம். அதனால் அமெரிக்கா ரஷ்யாவின் நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்காது என்று தெரிகிறது. இதற்கு இடையில் ரஷ்ய அதிபர் புதின் மீது தனிப்பட்ட முறையில் தடை விதிக்கக் கோரி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருகிறார். ஆனால் இது ரஷ்ய அதிபர் புதினை பெரிதளவில் தாக்கது என்றும் அரசியல் ரீதியாக இது பெரும் அழிவை ஏற்படுத்தும் என்றும் மாஸ்கோ கூறியுள்ளார்.