Categories
தேசிய செய்திகள்

இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா…? “கலாம் புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம்பெற்ற 3 வயது சிறுவன்”… குவியும் பாராட்டு…!!!

புதுச்சேரியில் 3 வயது சிறுவன் 250க்கும் மேற்பட்ட படங்களை பார்த்து சொல்லி கலாமுக்காக ரெக்கார்டில் அதிக ஞாபக சக்தி கொண்ட மாணவன் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியை சார்ந்தவர் ஸ்டாலின் என்பவரின்  மனைவி லட்சுமி நாராயணி. இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகன் யாஸ்வின். தற்போது இவருக்கு 3 வயது 2 மாதம் ஆகின்றது. சிறுவன் யாஸ்வின் 2 வயது முதல் அதிக ஞாபக சக்தியுடன் விளங்கியதால் பெற்றோர்கள் அவருக்கு பல்வேறு படங்களை  காட்டி ஞாபக சக்தியை சோதித்து உள்ளனர். இதில் மாணவனுக்கு அதிக ஞாபகசக்தி இருந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் அந்த சிறுவனுக்கு முறையாக பயிற்சிகளை அளித்தனர்.

இந்நிலையில் கலாம் புக் ஆப் ரெகார்டில் தற்போது அதிகளவு ஞாபக சக்தி கொண்ட மாணவன் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார். குறிப்பாக அவர் 250 அட்டைகளை காண்பித்தால் அனைத்தையும் சொல்லும் திறன் படைத்துளளார். குறிப்பாக உலகத்தில் உள்ள நாட்டின் தேசிய கொடிகளை காண்பித்தால் அதன் தலைநகரம், விலக்குகள் பெயர்கள், பறவைகள் பெயர்கள், தேசிய தலைவர்களின் பெயர்கள், மலர்களின் பெயர்கள், மரங்களின் பெயர்கள் என 250 க்கும் மேற்பட்ட பெயர்களை தெரிவித்து சாதனை படைத்ததுள்ளான். இவனை பெற்றோர்கள் முதல் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |