பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 4 திட்டங்களை இலவச சிம் கார்டுடன் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சிம்கார்டு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் FTTH வாடிக்கையாளர்களுக்கு ரூ.599, ரூ.799, ரூ.999, ரூ.1,499 ஆகிய நான்கு திட்டங்களை இலவச சிம் கார்டுடன் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த பைபர் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற டேட்டா (3.3 TB அல்லது 3,300GB) வரம்பற்ற பிக்ஸட் லைன் வாய்ஸ் நன்மை, சிறந்த பதிவிறக்க மற்றும் பதிவேற்றும் வேகத்துடன் வருகிறது. மேலும் சிம் கார்டுடன் தொகுக்கப்படும் இலவச திட்டம் “பிவி75″ஆகும். இது 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த சலுகையை பற்றி கூடுதல் விவரங்களை பெற 1508 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.