Categories
உலக செய்திகள்

இந்த சிறுமியை கடத்தவில்லை…. அம்மாவிடமிருந்து மீட்ட காவல்துறையினர்…. வாலிபரின் சர்ச்சைக்குரிய பேச்சு….!!

பிரான்ஸில் சிறுமியை கடத்திய வழக்கு தற்போது மலேசியாவிலிருக்கும் நபரை நோக்கி திரும்பியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் vosges என்னுமிடத்தில் 8 வயது சிறுமியான மியா என்பவர் அவருடைய பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இவர் சட்டப்படி தனது தாயிடமிருந்து பிரிக்கப்பட்டதால் பாட்டி வீட்டில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சிறுமியை திடீரென்று 4 நபர்கள் திட்டமிட்டு காரில் கடத்தி சென்றனர். அதன்பின் மியாவை அவரது தாயாகிய லோலாவிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும்போது அவர்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டனர்.

இதனிடையே தாயும் மகளும் சுவிட்சர்லாந்திலிருக்கும் பழைய தொழிற்சாலையிலிருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அதன் பின் அவர்கள் லோலாவை கைது செய்து மியாவை மீட்டனர். இந்த நிலையில் மலேசியாவில் வசித்து வரும் Remy Daillet wiedemann என்பவர் இச்சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தொலைக்காட்சியின் பேட்டியில் கொடுத்துள்ளார். அதாவது இச்சம்பவம் கடத்தல் அல்ல, தாயின் வேண்டுகோளுக்கிணங்க குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றுள்ளார். இதனால் இந்த வழக்கில் அந்த வாலிபருக்கு தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

Categories

Tech |