Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த சூப்…சைனஸ், மூட்டுவலியை…குணமாகும்…!!

ஆட்டுக்கால் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால்                          – 4
மிளகு                                        – 3 தேக்கரண்டி
சீரகம்                                        –  2 தேக்கரண்டி
மல்லி தழை                           – சிறிதளவு
தனியாத்தூள்                        –  2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்            –  10
பூண்டு                                       –  5 பல்

செய்முறை:

ஆட்டின் நாலு கால்களை எடுத்து  அதை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

மிச்சி ஜாரில் 3 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி தனியாத்தூள், 10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு இவற்றை சேர்த்து  நன்கு அரைத்து  கொள்ளவும்.

அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து அதில் 8 டம்ளர் தண்ணீர், அரைத்த மசாலா, மஞ்சள்தூள், சுத்தம் செய்த கால் துண்டுகள், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். பிறகு குக்கரின் விசில் வந்ததும் அடுப்பை அனைத்து 20 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தாளித்து, வேக வைத்த கால் கறிகளுடன் சேர்த்து கிளறினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.

Categories

Tech |