Categories
லைப் ஸ்டைல்

இந்த சூப் மட்டும் சாப்பிட்டு வாங்க….”எந்த நோயும் உங்க பக்கத்திலேயே வராது”… அம்புட்டு நல்லது..!!

இந்த சூப்பை டெய்லி சாப்பிடுவாங்க. எந்த நோயும் உங்களை கிட்ட கூட நெருங்காது. உடம்பிற்கு அவ்வளவு நல்லது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் மாற்றி ஒருவராக காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியாது காய்ச்சல் என்பது உடல் சூடு மட்டும் தராது. தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளையும் தரும். இதைத் தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவைத் தயாரிப்பது எப்படியென இங்கே காண்போம். இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையைச் சேர்ந்தது. இத சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்க வல்லது.

தேவையான பொருட்கள்:
சீரகம் – 1/2 டீஸ்பூன்.
மிளகு – 1/2 டீஸ்பூன்.
இஞ்சி – 1 துண்டு.
பட்டை – சிறிதளவு.
வெள்ளை பூண்டு – 10 பற்கள்.
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.
தனியா – 1 டீஸ்பூன்.
கிராம்பு – 7.
தண்ணீர் – 750 ml.
உப்பு – தேவையான அளவு.

சூப் செய்முறை:.

ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்தக் கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளிலிருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்தக் கலவையை நன்கு கிளறவும்.

10 நிமிடங்கள்:.
ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்தப் பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும்.

சூப் ரெடி:.
பிறகு அந்தத் திரவத்தைத் தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்தத் திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்தத் திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.

சளித் தொல்லை:.

இந்தச் சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்குச் சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும். இந்தச் சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.

Categories

Tech |