விளையாட்டு வீரர்களுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும் போட்டிகள் குறித்து விளையாட்டு வீரர்கள் செய்திகளை அறிந்து கொள்வதற்காகவும் TN SPORTS ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு டிஜி லாக்கர் மூலமாக இனிவரும் நாட்களில் வழங்கப்பட இருக்கின்றது. இதனால் கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சுப்பிரமணி அவர்கள், ஆடுகளம் செயலியை வருகின்ற 19ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள மக்கள் என அனைவரும் பயன்பெருமாறு கூறியுள்ளார்.