மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இத்தேர்தலை முன்னிட்டு இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 2 பேரை வெட்டி கொலை செய்தனர். இதனை கண்டித்து இருவரது உறவினர்களும் சாலைமறியலில் ஈடுபட்டு அவர்களது உடலை வாங்க மறுத்தனர்.
மேலும் இவர்கள் 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகையும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் கலெக்டர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இவர்கள் அக்கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.