சங்கு பூ போட்டு ப்ளூ டீ குடிப்பதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய தொகுப்பு.
இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம் சங்குப்பூ. சங்குப்பூ உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்க வல்லது. அதோடு தேடி அலையாமல் மிகவும் எளிதாக அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. சங்குப்பூ நமது உடலில் இருக்கும் குடல் புழுக்களை நீக்குவதற்கு உதவுவதோடு கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. இந்த சங்குப்பூ வைத்து தயாரித்த ப்ளூ டீ பெண்கள் அருந்துவது மிக மிக அவசியமானது.
ப்ளூ டீ செய்முறை
- முதலில் சங்கு பூவை செடிகளில் இருந்து பறித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
- பின்னர் அதனுடன் தேவையான அளவு எலுமிச்சைசாறு சேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் நீல நிறத்தில் மாறியவுடன் தேன் கலந்து குடித்து வருவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தினமும் ஒரு வேளை ப்ளூ டீ குடித்தால் கூட கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். அதோடு இந்த ப்ளூ டீயை குடிப்பதற்கு எந்த ஒரு கால அவகாசம் கிடையாது. நினைக்கும் போதெல்லாம் இந்த டீயை குடிக்கலாம்.