2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான சிறப்பு விருந்தினர் பற்றி ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வருடம்தோறும் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்தநிலையில் அடுத்த வருடம் நடைபெறும் விழாவில் ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு’ (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆனால் அதை மத்திய அரசு மறுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வருடம் குடியரசு தினத்திற்கான சிறப்பு விருந்தினர் குறித்த ஊடகங்களின் அறிக்கையை பார்த்தோம். அவை முற்றிலும் தவறானது. அவற்றிற்கு எந்த உண்மை ஆதாரமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.