ஸ்வீடனில் நாள்தோறும் கொரோனா தடுப்பூசிகள் நூற்றுக்கணக்கில் வீணாக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டின் மிக மூத்த மருத்துவர்களில் ஒருவர் Johan Styrud. இவர் ஸ்வீடனில் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் வீணாக்கப்படுவதாக ஒத்துக்கொண்டார். அதாவது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டான்டரிட் மருத்துவமனையின் ஆலோசகரான Johan Styrud பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியுள்ளதாவது, பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் தடுப்பூசியால் ஏற்பட்ட விளைவுகளினால் மக்கள் பயத்தில், இறுதி நேரத்தில் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்துகொண்டதை ரத்து செய்து விட்டார்கள். மேலும் ஸ்வீடனில் 65 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி மட்டும் தான் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மக்கள் பெருந்தொற்றை தடுப்பதற்காக அளிக்கப்பட்ட வாய்ப்பை ரத்து செய்வது பயத்தை உண்டாக்குகிறது. மேலும் இந்த வயதினருக்கு தடுப்பூசியால் எதிர்வினை விளைவுகள் ஏற்படுவதற்கு குறைந்த வாய்ப்புகள்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.