ஜெர்மனியில் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி செலுத்தபட்டதால் மூளையில் இரத்தக்கட்டி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் கொரோனாவிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நபர்களுக்கு மூளையில் ரத்த கட்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று மூளையில் இரத்தக்கட்டி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் 3 பேர் இதனால் உயிரிழந்ததாக ஜெர்மனி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது பெண்கள் 12 பேர் மற்றும் ஒரு ஆண் இதனால் பாதிக்கப்பட்டதாகவும், இவர்கள் 20 முதல் 63 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதனிடையே ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி ஆஸ்ட்ரோஜனகா நிறுவனத்தின் தடுப்பூசி பாதுகாப்பிற்குரியதுதானா? என்பது தொடர்பான மீளாய்வு பெற கடந்த திங்கட்கிழமை இந்த தடுப்பூசி செலுத்துவதை ஜெர்மனி நிறுத்தியது.
இந்நிலையில் நேற்று மாலையில் வெளியான இதன் முடிவுகள் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி பாதுகாப்பிற்குரியது என்று தெரியவித்துள்ளது. அதே சமயத்தில் இதன் பக்க விளைவுகள் ஒரு சிலருக்கு மூளையில் ரத்தக் கட்டிகளை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போது சுகாதாரத் துறை அமைச்சரான jens Sphan ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்திருக்கிறார். இதனால் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.