Categories
மாநில செய்திகள்

இந்த தண்டனை வேண்டாம்….. நல்ல சம்பளம் தாங்க…. முதல்வரிடம் மருத்துவர்கள் வேண்டுகோள்….!!

மருத்துவர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வரிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளனர்.

நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினமாக ஜூலை 1 அனுசரிக்கப்படுகிறது. எப்போதும் இல்லாமல் இந்த வருடம் மிகச் சிறப்பாக மருத்துவர் தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான காரணமாக கொரோனவைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது கடமையை செய்து வருகிறார்கள். இதில் சில மருத்துவர்களும் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள்.

எனவே அவர்களுக்கு கடமை படும் விதமாக இந்நாளை இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் முதல் ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர் தினத்தை அரசு விடுமுறையாக அனுசரித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் சங்கம் தேசிய மருத்துவ நாளான இன்று முக்கிய வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முன்வைத்துள்ளார்.

அதில் வாழ்த்துக்கள் கூறிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, இந்நாளில் தமிழக அரசு மற்றொரு உதவியை எங்களுக்கு செய்தால் நன்றாக இருக்கும் அது என்னவென்றால் பணியிட மாற்றம் என்னும் தண்டனையை ரத்து செய்து நாட்டிலேயே மிகச் சிறப்பான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும். கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு இம்மாதிரியான அறிவிப்பை அறிவித்தால் சிறப்பாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |