Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த தண்ணீரை குடிக்க முடியாது…. மாசடைந்த குடிநீர் விநியோகம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21-வார்டுகளுக்கும் லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காகவே லோயர்கேம்பில்  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக 21-வது வார்டு லோயர் கேம்ப் பகுதியில் மிகவும் கலங்கலான, மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்த குடிநீரை குடிப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |