Categories
தேசிய செய்திகள்

இந்த தவறை போட்டோ எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு?…..வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக் கொள்ளாமல் சாலைகளை ஆக்கிரமித்து பொது போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் பல விபத்துகளும் நடைபெறுகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்த அனுப்புவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற சட்டம் விரைவில் வரப்போகிறது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியது, நான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப் போகிறேன். அதாவது தவறாக நிறுத்திய வாகனங்களை படம் எடுத்து அனுப்புகிறபோது, அந்தக் குற்றத்திற்கு ரூ.1000 அபராதம் விதித்து, படம் எடுத்து அனுப்பிவருக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படும். அப்போது வாகனங்களை தவறாக நிறுத்தும் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |