பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் ஓரத்துநாடு தாலுகாவில் அமைந்துள்ளது. தற்போது திருவோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டசபையில் அறிவித்தார். அதற்கான பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை தாலுகாவில் இருக்கும் அதம்பை வருவாய் கிராமத்தை திருவோணம் தாலுகாவில் சேர்ப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் நேற்று அதம்பை வருவாய் கிராமத்தை திருவோணம் தாலுகாவில் இணைக்க கூடாது என கூறி பட்டுக்கோட்டை-செங்கிப்பட்டி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது