கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம் வருகிற 18-ஆம் தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருவதாக டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ‘ரெட் சிக்னலில் இன்சின் நிறுத்தம்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சாலையில் வண்டியில் செல்லும்போது சிவப்பு விளக்குகள் எரியும் போது வண்டியின் எஞ்சினை அணைத்து விடுங்கள் என்று பொருள்படும் ரெட் சிக்னல் என்று நிறுத்தம் திட்டம் தற்போது மீண்டும் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இத்திட்டம் வருகிற 18-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதன்படி நீங்கள் வாகனங்களில் செல்லும்போது ரெட் சிக்னல் விழுந்தால் உங்களுடைய வண்டியில் என்ஜினை உடனே நிறுத்திவிடுங்கள். மேலும் இதனை இன்றிலிருந்து நீங்கள் தொடங்கலாம்.”எனவும் அவர் கூறியுள்ளார்.