Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பொங்கல் தொகுப்பு’ சொதப்பியது எங்கே?…. செம டென்ஷனில் ஸ்டாலின்…. பீதியில் நடுங்கும் அதிகாரிகள்….!!!!

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் எழாமல் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க அண்மையில் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி பொங்கல் தொகுப்பிற்காக ரூ.1,296.88 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் தரமற்ற பொருட்கள் தான் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படுவதாக வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சிகள் புளியில் பல்லி, உருகிய நிலையில் வெல்லம் என பிரஸ் மீட் வைத்து ஒவ்வொன்றாக கையில் எடுத்துக் காட்டினார்.

இதனை கவனித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உரிய முறையில் பொங்கல் தொகுப்புகள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் முதல்வர் ஆய்வு செய்த பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வெல்லம் சாம்பார் பாக்கெட் மாதிரி தான் கொடுக்கப்பட்டது.

இதனால் கொந்தளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் சொதப்பியது எங்கே ? இதனை அதிகாரிகள் கவனிக்காமல் விட்டது ஏன் ? என்பது பற்றி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபத்தின் உச்சிக்கே சென்று மூத்த அதிகாரிகளை தாறுமாறாக சாடியுள்ளார். அதேசமயம் இந்த திட்டத்தை சொதப்பிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் யோசனை செய்து வருவதால் அதிகாரிகள் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |