Categories
தேசிய செய்திகள்

இந்த தேதிகளில் வங்கிகள் செயல்படாது… வெளியான அறிவிப்பு..!!

மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வங்கிகள் இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த மாதம் சில வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கமும், ஐக்கிய வங்கி சங்கங்கள் மன்றமும் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் வேலைநிறுத்த நாட்களில் வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டாலும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக வங்கிகளின் சேவைகள் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |