வரும் செப்டம்பர் 16ம் தேதி மட்டும் நாடு முழுதும் உள்ள 4,000 திரையரங்குகளில் ரூபாய்.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரை அரங்குகளுக்கு சென்று படம்பார்ப்பது தற்போது மிகவும் யோசனைக்குரியதாக உள்ளது. ஏனெனில் டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், அங்கு விற்கப்படும் உணவு விலை என 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் குறைந்தது ரூ.1000 செலவாகும். அண்மையில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்து விட்டதற்கு டிக்கெட் விலை ஒரு காரணமாக கூறப்பட்டது.
இதனால் ஏராளமானோர் ஓடிடியிலேயே படம் பார்க்க விரும்புகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 16ம் தேதி மட்டும் டிக்கெட் விலை ரூ.75 தான். தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு நாடு முழுதும் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூபாய் 75 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் ஆகிய பல நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கிறது.