Categories
Uncategorized

இந்த நடிகருடன் நடிக்க தான் எனக்கு ஆசை… விஜய் பட நடிகை மாளவிகா மோகனன் பேட்டி…!!

விஜய் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தனக்கு ரன்பீர் கபூருடன் நடிக்க தான் ஆசை என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலிலும் தமிழ் திரையுலகமே தற்போது உச்சரித்துக்கொண்டிருப்பது மாளவிகா மேனன் பெயரை தான். தென்னிந்தியாவின் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது மாளவிகா மோகனன் உள்ளார். இவர் இப்போது பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு மாளவிகா மோகனுக்கு சம்பளமாக 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நயன்தாராவினுடைய சம்பளம் 4 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எதையும் வெளிப்படையாக கூறும் மாளவிகா மோகனன் கொரோனா நாட்களில் வீட்டிலிருந்தவாறு ‘தன்னை எப்படி இம்ப்ரஸ் பண்ணலாம், தான் வெறுப்பது எவற்றையெல்லாம், நடிக்க விரும்பும் நடிகர்’ இது போன்ற பல்வேறு தகவல்களை ஒரு இணையத்திற்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

“சினிமாவில் நான் வெறுப்பது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று குடும்பத்தினரைப் பிரிந்து ஷூட்டிங்கில் இருப்பது. சில சமயம் இரண்டு மாதங்கள் கூட பிரியும் சூழல் இருக்கும். அப்பாவும் அண்ணனும் அவரவர் வேலையில் பிசியாக இருப்பார்கள். அம்மா வீட்டில் தனியாக இருப்பார். நான் அம்மாவை நினைத்து கவலை கொள்வேன். இரண்டாவதாக எனக்கு கான்ட்ராவசி பிடிக்காது. நான் மிகவும் ரொமான்டிக்கானவள். அதனால் எனது வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். நிறைய ரொமான்டிக் படங்களில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன். நான் ரொமான்டிகானவள் என்பதால் இரவு எனக்கு பிடிக்கும். நான் ஒரு இரவுப் பறவை. இரவில் நண்பர்களுடன் உரையாடுவேன் பாலிவுட் ரொமான்டிக் படத்தில் நான் நடிக்க விரும்புகிறேன் என்றால் அது ரன்பீர் கபூர்தான். தென்னிந்தியாவில் விஜய் சார் தான் அது நிறைவேறி விட்டது” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |