Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளுக்கு எதிராக…. ரஷ்ய அதிபர் பிறப்பித்த புதிய ஆணை…..!!!!!

நட்பற்ற நாடுகளுக்கு எதிராக ரஷ்யஅதிபர் புடின் புது ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது ரஷ்ய நட்பற்றதாக கருதும் நாடுகளில் இருந்து வரக்கூடிய குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தும் ஆணையில் புடின் கையெழுத்திட்டு இருக்கிறார். அந்த ஆணை வரும் திங்கட்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நார்வே, சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்கான ரஷ்யாவின் எளிமைப்படுத்தப்பட்ட விசா வழங்கும் திட்டத்தை இந்த ஆணை ரத்து செய்து உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மீதும் அதன் குடிமக்கள் (அல்லது) அதன் சட்டநிறுவனங்களுக்கு எதிராக நட்பற்ற நடவடிக்கைகளை எடுக்கும் வெளிநாட்டு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், நாடற்ற மக்கள் மீது தனிப்பட்ட நுழைவு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக முடிவு செய்ய ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்ததற்காக தங்களது நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்த நாடுகளை ரஷ்யா நட்பற்ற நாடுகளாக கருதுகிறது. சென்றமாதம் நட்பற்ற நாடுகளின் பட்டியலுக்கு ரஷ்யா அரசாங்கமானது ஒப்புதல் வழங்கியது. இப்பட்டியிலில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |