Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும்…. பச்சை பட்டியல் தயார் செய்து வரும் நாடு….!!

பிரிட்டன் மக்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும் என பச்சை பட்டியல்  தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 17-ஆம் தேதி முதல்  சுற்றுலா விடுமுறையை கொண்டாட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலையும் அறிவிக்கப் போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியா, வங்கதேசம், பிரேசில், கொலம்பியா, சிலி போன்ற 40 நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து இருப்பதால் அந்த நாடுகளுக்கு பயண தடைவிதித்து சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம் என பச்சை பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் பச்சை பட்டியலில் இலங்கை, மால்டா, இஸ்ரேல், ஐஸ்லாந்து, மாலத்தீவுகள் போன்ற 30 நாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |