ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்து நிறைந்த பகுதி என்று அறிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகமாக பாதிப்படைந்த அபாயகரமானதாக ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து இருப்பதாக ஜெர்மனி அறிவித்திருக்கிறது. அதாவது ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் “அபாயம் நிறைந்த பகுதி” என்று போலந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வகைபடுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.
காரணம் போலந்தில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் சராசரியாக ஒரு லட்சம் நபர்களுக்கு 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சகமானது, போலந்து நாட்டிற்கு அனாவசியமான காரணங்களுக்காகவோ, சுற்றுலாவிற்காக பயணம் மேற்கொள்ள தடை விதித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதேபோன்று கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து போலந்து நாட்டின் எல்லையை கடந்து வரும் அனைத்து நபர்களும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற பரிசோதனையின் முடிவை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.