பொருளாதார ரீதியாக பிரச்சனை இல்லாதவர்கள் என்பது இருக்கவே மாட்டார்கள். சில சந்தர்ப்பங்களில், பெரும்பாலான மக்கள் கடன் வாங்கவும், கடன் கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள். சில குறிப்பிட்ட தினங்களில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ செய்தால் அதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கார்த்திகை, சித்திரை, மூலம், ரேவதி, உத்திராட நட்சத்திர நாட்களில் பணத்தை கடன் கொடுப்பதோ வாங்குவதோ நல்லது அல்ல என ஜோதிட சாஸ்திரத்திரத்தில் நம்பப்படுகிறது.
அதேபோல் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு கடன் கொடுப்பதோ, வாங்குவதோ கூடாது. நிலைமையைப் பொறுத்து நிதி பரிவர்த்தனைகளுக்கு சாதக மற்ற நாட்களில் கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பதை தவிர்ப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.