நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிப்பது போன்ற தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருப்பினும் மீண்டும் பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதில் மாநில அரசுகள் கவனமாக இருக்கின்றன.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகை காலங்கள் வரும் நிலையில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது. பண்டிகை காலங்களில் மக்கள் சமூக இடைவெளியை மறந்துவிட்டு கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்தால் மேலும் தோற்று அதிகரிக்கக்கூடும். எனவே பண்டிகை காலங்களை கவனத்தில் கொண்டு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.