அரசின் உத்தரவின்படி அரசு விழாக்கள் கொண்டாடப்படும் தினங்களில் மதுக்கடைகளை திறக்க ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
நெருங்கி வரும் திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம் குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினமான 15ஆம் தேதி, வள்ளலார் தினமான 18 ஆம் தேதி, குடியரசு தினமான 26ஆம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மற்றும் மதுகூடங்களை மூட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசின் தடையை மீறி மதுக்கடைகளை திறந்தாலோ, சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.