அமெரிக்க அதிபர் ஜோபைடன் சவூதி அரேபியாவிற்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்துள்ளார்.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து அவரின் முதல் வெளியுறவு கொள்கைக்கான உரையில், ஏமனில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் சவுதி அரேபியா மக்களைக் காக்கவும். நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு போன்றவற்றை காப்பதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை சவுதி அரேபியா எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து Trimothy Lenderking என்பவரை ஏமனின் சிறந்த தூதர் என்று நியமித்துள்ளார். மேலும் இவர் இதற்கு முன்பு இவர் மூத்த அதிகாரியாக அமெரிக்க தூதரகத்தில் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சவுதி அரேபியாவை பாதுகாப்பதற்காக அமெரிக்கா ஆதரவளிக்கும் என்ற ஜோபைடனின் அறிவிப்பை சவுதி அரேபியா வரவேற்றிருக்கிறது.