Categories
உலகசெய்திகள்

இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்கிறீர்கள்…? பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு எதிராக இம்ரான் கான் ட்வீட்…!!!!!!

நாட்டின் உயிர் மட்டத்தில் ஊழலை சட்டபூர்வமாகியதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர்ஜாவேத் பசுவா பற்றி ட்வீட் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம் பி அசம்கான் சுவாதி கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டபட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெஹபாஸ் விடுவிக்கப்பட்டதை அடுத்து அசாம் கான் ட்விட்டரில் மிஸ்டர் பாட்ஷா உங்களுக்கு உங்களுடன் இருக்கும் சிலருக்கும் வாழ்த்துக்கள் ஏனென்றால் உங்கள் திட்டம் உண்மையில் வேலை செய்கிறது. அனைத்து குற்றவாளிகளும் நாட்டின் செலவில் விடுவிக்கப்பட்டு வருகின்றார்கள் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதன் மூலமாக நீங்கள் ஊழலை சட்டபூர்வமாக்கி இருக்கின்றீர்கள்.

மேலும் இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கின்றீர்கள் என பதிவிட்டு இருக்கிறார். இதனை அடுத்து அசாம் கான் மீது மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் எஃப் ஐ ஆர் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அரசு நிறுவனங்கள் மற்றும் பாகிஸ்தான் நிறுவனத்தின் ராணுவ தளபதி உட்பட அதன் மூத்த அரசு பணியாளர்களுக்கு எதிராக மோசமான உள்நோக்கங்களுடன் அசாம் கான் ட்வீட் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவ தளபதி மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக மக்கள் மற்றும் ராணுவ பணியாளர்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் முயற்சி எனவும் நிதித்துறை அமைப்பு மீது அவநம்பிக்கை உருவாக்கும் முயற்சி  எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அசம்கான் இஸ்லாமிய பாதத்தில் உள்ள செசன் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரித்த மூத்தசிவில் நீதிபதி ஷபீர் பாட்டி அசம்கானி விசாரிக்க எப்ஐஏக்கு இரண்டு நாட்கள் அனுமதியளித்து அக்டோபர் 15ஆம் தேதி கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அசம்கான் நான் சட்டத்தை மீறியதற்காகவோ அடிப்படை உரிமைகளை மீறி எதற்காகவோ கைது செய்யப்படவில்லை பஜ்வா என்னும் ஒரு பெயரை எடுத்தது மீறல் என கூறி கைது செய்யப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார் மேலும் தன்னை சித்திரவதை செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |