சில நாடுகளில் நீங்கள் குடியுரிமை கோரும்போது சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது 5 ஆண்டுகள் வரை நீங்கள் பிரான்சில் வசித்திருந்தாலோ ( அல்லது ) பிரான்ஸ் நாட்டில் ஒருவரை திருமணம் செய்து கொண்டாலோ நான்கு வருடங்களில் குடியுரிமை கோரலாம்.
அதேபோல் இரட்டை குடியுரிமையை பிரான்ஸ் அனுமதிக்கிறது. இருப்பினும் நம்முடைய சொந்த நாடு இரட்டைக்குடியுரிமை அனுமதிக்குமா ? என்பதை தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் இரட்டை குடியுரிமையை சில நாடுகள் அனுமதிப்பதில்லை. உங்கள் நாடு இரட்டை குடியுரிமையை அனுமதிக்கிறதா ? என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு பிரான்சில் குடியுரிமை பெறுவது நல்லது.